டார்வின் அருகே ராணுவ விமான விபத்தில் 03 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக பல விசாரணைகள் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு இராணுவ பயிற்சியின் போது நேற்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 05 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
விபத்து ஏற்பட்ட போது போர் விமானத்தில் 23 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில் அமெரிக்க பாதுகாப்புப் படைகளும் துணை நிற்கும் என்று ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.
டார்வினில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் நடைபெறும் இந்த ராணுவ பயிற்சியில் 2,500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.