Newsவிக்ரம் லேண்டர் நிலவின் மேல்பரப்பு வெப்பநிலை குறித்த முதல் பரிசோதனை குறிப்பை...

விக்ரம் லேண்டர் நிலவின் மேல்பரப்பு வெப்பநிலை குறித்த முதல் பரிசோதனை குறிப்பை அனுப்பியுள்ளது

-

நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலை என்னவென்பது குறித்து சந்திரயான்-3 விண்கலனின் விக்ரம் லேண்டர் முதல் பரிசோதனை குறிப்பை அனுப்பியுள்ளது

இது தொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “விக்ரம் லேண்டரில் உள்ள சேஸ்ட் ChaSTE (Chandra’s Surface Thermophysical Experiment) பேலோடின் முதல் ஆய்வுக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. நிலவின் மேல் பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் பணியை செய்கிறது. இது நிலவின் மணல்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட அளவு துளையிட்டு வெப்பத்தை அறிந்துள்ளது.

அதாவது நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலில் இருந்து 10 செ.மீ ஆழத்துக்கு துளையிட்டு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சென்டிமீட்டரில் வெப்ப நிலையை அறியும் வகையில் அதில் 10 வெப்பநிலை உணரிகள் பொருத்தப்பட்டிருந்தன. நிலவின் தென் துருவத்தில் இதுபோன்று மணல்பரப்பின் மீது வெப்பநிலை கண்டறியும் சோதனை செய்யப்படுவது இதுவே முதன்முறை. மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பகுதிக்கு ‘சிவசக்தி’ என்று பெயரிடப்பட்டது. இந்தப் பகுதியில் ரோவர் வலம் வரும் படங்களின் தொகுப்பை இஸ்ரோ நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டது. அதில் 26 கிலோ எடை கொண்ட ரோவர், தனது 6 சக்கரங்களால் தென்துருவப் பகுதியில் ரிமோட் கார் போன்று முன்னும், பின்னும் ஊர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை செய்வதை தெளிவாக காணமுடிந்தது. இந்நிலையில் இன்று நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலை பற்றிய பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

Latest news

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை உயர்வு

சீனாவின் மலைப்பகுதியான திபெத் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் 130...

2025-இல் முக்கிய வங்கிகளின் பண விகிதத்தில் ஏற்படும் மாற்றம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் 2025 ஆம் ஆண்டிற்கான பண விகிதத்தில் ஏற்படும் மாற்றம் குறித்த தங்கள் கணிப்புகளை வழங்கியுள்ளன. NAB குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ...

Dandenong-இல் கண்டெடுக்கப்பட்ட இனந்தெரியாத ஒருவரின் சடலம்

நேற்று காலை 9.40 மணியளவில் அவசர சேவைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி,Dandenong-ல் உள்ள சொத்து ஒன்றில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Dandenongல் உள்ள மெக்ரே செயின்ட்டில்...

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. LinkedIn's Jobs on the Rise அறிக்கைகள் ஆஸ்திரேலியா முழுவதும் மிகவும் தேவைப்படும்...

இளைஞர்கள் அதிகமுள்ள நகரம் எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் அதிக இளைஞர்கள் வசிக்கும் தலைநகரமாக டார்வின் காணப்படுகின்றது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர பணியகத்தின் தரவுகளின்படி, 35 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக டார்வின்...

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. LinkedIn's Jobs on the Rise அறிக்கைகள் ஆஸ்திரேலியா முழுவதும் மிகவும் தேவைப்படும்...