அவுஸ்திரேலியாவில் இவ்வருடம் அதிக சம்பள அதிகரிப்புடன் கூடிய வேலைத் துறைகள் தெரியவந்துள்ளன.
SEEK job இணையதளம் நடத்திய ஆய்வில், இன்சூரன்ஸ் துறையில் பணிபுரிபவர்கள் அதிக சம்பள உயர்வு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் சம்பள உயர்வு 9.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சமூக சேவைகள் 6.7 வீத சம்பள உயர்வையும், தொழிநுட்ப தொழில்கள் 5.9 வீத சம்பள அதிகரிப்பையும் சில்லறை வர்த்தக பிரிவினர் 5.5 வீத சம்பள அதிகரிப்பையும் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுமானத் துறைக்கு 5.4 சதவீதம் / நிர்வாகத் துறைக்கு 4.5 சதவீதம் / கணக்குத் துறைக்கு 4.8 சதவீதம் சம்பளம் அதிகரித்துள்ளதாக SEEK இணையதளம் தெரிவிக்கிறது.
விற்பனையாளர்களுக்கு 4.7 சதவீதமும், வடிவமைப்பாளர்களுக்கு 4.6 சதவீதமும் சம்பளம் அதிகரித்துள்ளது.