ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு குறைந்த திறன் பயன்படுத்தும் மெசஞ்சர் லைட் அப்ளிகேஷனை நீக்க ஃபேஸ்புக்கின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் 18 முதல் தற்போதைய பயனர்கள் இதைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Messenger Lite அப்ளிகேஷன், அதன் சிறிய திறன் 01 மெகாபைட் காரணமாக மிகவும் பிரபலமானது.
இந்த அப்ளிகேஷன் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட 5 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். (கென்யா, மலேசியா, இலங்கை, துனிசியா, வெனிசுலா)
பழைய ஆண்ட்ராய்டு போன்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன் தற்போது பிரபலம் குறைந்துள்ளதாகவும், பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.