நிதி மற்றும் உளவியல் அழுத்தங்கள் காரணமாக பல ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் விளையாட்டை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
2,300 விளையாட்டு வீரர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சிறந்த விளையாட்டு வீரர்களில் பாதி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பது தெரியவந்துள்ளது.
அதாவது அவர்களின் ஆண்டு வருமானம் $23,000க்கும் குறைவாக உள்ளது.
இவற்றில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 40 வீதத்துக்கும் அதிகமான மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் அவர்களில் 1/4 பேர் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
18 முதல் 34 வயதுக்குட்பட்ட 2/3 வீரர்கள் விளையாட்டிலிருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு 2/3 வீரர்களும், 2032ஆம் ஆண்டு பிறிஸ்பேன் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு 43 சதவீத வீரர்களும் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டு வாடகை மற்றும் அடமானக் கடன் பிரீமியங்களின் அதிகரிப்பு இதற்கு முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை,
உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கு அரசாங்க நிதி மட்டும் போதாது, எனவே அவர்கள் வேறு வருமான ஆதாரங்களை நோக்கி திரும்ப ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் விளையாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.