Newsவிக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த ரோவர்

விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த ரோவர்

-

இந்தியாவின் இஸ்ரோ நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு ஏவிய சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் கடந்த சில நாட்களாகவே நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இது நிலவில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது.

இதுதவிர ஒட்சிசன் இருப்பதையும் கண்டறிந்துள்ள ரோவர், ஹைட்ரஜன் இருக்கிறதா என தனது தேடுதல் வேட்டையை தொடங்கி விட்டது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், லேண்டரை எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...