News3-ம் உலகப் போர் நிச்சயம் நடக்கும் என டிரம்ப் விமர்சனம்

3-ம் உலகப் போர் நிச்சயம் நடக்கும் என டிரம்ப் விமர்சனம்

-

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அண்மையில் நாட்களுக்கு ஒரு வழக்கில் சிறை சென்று சில மணி நேரங்களில் பிணையில் வெளி வந்தார்.

இதனிடையே அமெரிக்காவில் 2024-இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய ஜனாதிபதியான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களமிறங்க துடிக்கும் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஜோ பைடனை கடுமையான விமர்சித்துள்ளார்.

குறித்த அந்த வீடியோவில், ‘நேர்மையற்றவரான ஜோ பைடன் முட்டாள் மட்டுமல்ல, திறமை இல்லாதவரும் கூட. நாட்டின் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எல்லைகளை திறந்துவிட்டதன் மூலம், அப்பட்டமான வெறிப்பிடித்தவரான அவருக்கு மூளை கலங்கிவிட்டது என்று நினைக்கிறேன். அவரது மனப்பிறழ்வு நமது நாட்டை சீரழித்து 3-ம் உலகப்போரை நோக்கி இட்டுச் செல்லும்’ என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல் போனில் டஜன் கணக்கான தொடர்புடைய கோப்புகளை வைத்திருந்ததாகவும் சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண்...

பெற்றோரைப் பலிகொடுத்து குழந்தைகளுக்கு உதவுகிறதா AI?

AI கல்வி தொழில்நுட்ப செயலிகள் குழந்தைகளை கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் கவனமாக இருப்பது அவசியம்...

விக்டோரியாவில் மூடப்படும் மற்றொரு மருத்துவ வசதி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சமூக சுகாதார அமைப்புகளில் ஒன்றான Cohealth, இந்த ஆண்டு இறுதியில் அதன் பொது மருத்துவர் சேவைகளை மூட முடிவு செய்துள்ளது. நிதி சிக்கல்கள் காரணமாக...

ஆஸ்திரேலியாவில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள சைபர் குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் பெரிய வணிகங்களுக்கு எதிரான சைபர் குற்றம் ஒரு வருடத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. சைபர் குற்றங்களால் சில வணிகங்கள் ஆண்டுக்கு $200,000...

சந்தேகத்திற்கிடமான பொட்டலம் காரணமாக Australia Post ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

இரண்டு தபால் வரிசைப்படுத்தும் மையங்களில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஐந்து ஆஸ்திரேலிய தபால் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குயின்ஸ்லாந்தின் Townsville West End-இல் உள்ள...

ஆஸ்திரேலியாவில் மேலும் அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயம்

காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. "காட்டுத்தீ நிலை" என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை, காட்டுத்தீ...