குயின்ஸ்லாந்து மாநில அரசு, இந்த மாத இறுதியிலிருந்து சுகாதாரப் பணியாளர்களுக்குக் கட்டாயக் கோவிட் தடுப்பூசியை நீக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, 03 வருடங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்த இந்த கட்டாயத் தேவை 2021ஆம் ஆண்டு முதல் நீக்கப்படும்.
இருப்பினும், குயின்ஸ்லாந்து சுகாதார ஊழியர்களுக்கு தட்டம்மை, சளி மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகள் கட்டாயமாகும்.
குயின்ஸ்லாந்து மாநில அரசு, கட்டாய கோவிட் தடுப்பூசி நீக்கப்பட்டாலும், விருப்பமுள்ள சுகாதாரப் பணியாளர்கள் அதைப் பெறுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கிறது.
கடந்த 03 வருடங்களாக நடைமுறையில் உள்ள இந்த கட்டாயத் தேவையின் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது வெளியேறிய சுமார் 1,200 குயின்ஸ்லாந்து சுகாதார ஊழியர்களும் மீண்டும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான குயின்ஸ்லாந்து சுகாதார ஊழியர்களுக்கான 07 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் இன்று முதல் 05 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.