நேற்று முதல் ஹாங்காங் மற்றும் தென் சீனாவை பாதித்த சூறாவளி காரணமாக சுமார் 460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா மற்றும் வியாபாரத்திற்காக வந்த பயணிகள் பலர் தற்போது ஹொங்கொங் விமான நிலையத்தில் தங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட சுமார் 400 பேரை தற்காலிக தடுப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய பாடசாலை தவணை ஆரம்பிப்பதும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், சீனாவின் முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த மோசமான வானிலையால் ஹாங்காங்கில் பங்குச் சந்தையும் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், அடுத்த சில மணித்தியாலங்களில் இந்த அபாயம் மறைந்துவிடும் எனவும் வானிலை திணைக்களம் கணித்துள்ளது.