Newsநிலவில் ஏற்பட்ட மாற்றம் - நாசா வெளியிட்ட புகைப்படம்

நிலவில் ஏற்பட்ட மாற்றம் – நாசா வெளியிட்ட புகைப்படம்

-

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷ்யா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது.

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்ய விண்வெளி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டது.

புவி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைகளை அதிவேகமாக கடந்து சென்ற லூனா-25 விண்கலத்தை தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டபாதைக்குள் கடந்த மாதம் 19 ஆம் திகதி நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்தது.

இந்த லூனா-25 விண்கலம் விழுந்த இடத்தை நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது.

லூனா -25 விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இது லூனா-25 விண்கலம் விழுந்த இடமாக இருக்க வாய்ப்புள்ளது என எல்ஆர்ஓ குழு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய பள்ளம், 10 மீற்றர் அகலத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

மேலும், நிலவின் குறிப்பிட்ட பகுதியை 2020 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தோடு, தற்போது லூனா -25 விழுந்த பிறகு எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...