Newsஆய்வு பணிகள் வெற்றிகரமாக முடிந்தது - பிரக்யான் ரோவர்

ஆய்வு பணிகள் வெற்றிகரமாக முடிந்தது – பிரக்யான் ரோவர்

-

நிலவின் தென் துருவத்தில் பிரக்யான ரோவர் தனது ஆய்வு பணிகளை நிறைவு செய்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 23 ஆம் திகதியன்று நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகமாக தரையிறங்கியது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்து அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கியது. 

பிரக்யான் ரோவரானது 14 நாட்களுக்கு தனது ஆய்வு பணிகளை செய்யும் வகையில் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்தது பிரக்யான் ரோவர் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த சூரிய உதயத்தில் ரோவர் மீண்டும் பணியை தொடங்கும் என்ற நம்பிக்கையை இஸ்ரோ தெரிவித்துள்ளது, செப்டம்பர் 22 ம் திகதிக்கு பின்னர் பிரக்யான் ரோவர் மீண்டும் உயிர் பெற்று பணியைத் தொடரலாம் அல்லது நிரந்தரமாக செயலற்றுப் போகலாம் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவு தூதுவனாக பிரக்யான் இருக்கும் எனவும் இஸ்ரோ தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...