Cinemaபிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ். சிவாஜி காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ். சிவாஜி காலமானார்

-

நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரரும், பிரபல நகைச்சுவை நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி உடல்நலக்குறைவால் நேற்று காலைவ் தனது 66 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர். சந்தானத்தின் மகனான ஆர்.எஸ்.சிவாஜி, நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர்.

’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் நடிகராக அறிமுகமான ஆர்.எஸ்.சிவாஜியை நடிக்கச் சொல்லி வலியுறுத்தியது நடிகர் பிரதாப்.

அதன் பின்னர், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவர் பேசிய ‘சார், நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார்’ வசனம் ரசிகர்களிடையே பிரபலமடைந்து இப்போது வரை பேசப்பட்டு வருகிறது.

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த ஆர்.எஸ்.சிவாஜி, உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

நேற்று, இவரது நடிப்பில் ‘லக்கிமேன்’ திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...