CinemaInstagram இல் கால் பதித்த நயன்தாரா

Instagram இல் கால் பதித்த நயன்தாரா

-

அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா முதன் முதலாக குழந்தைகளின் முகத்தை வெளி உலகிற்கு காட்டினார்.

இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கிய நயன்தாரா ஒரே நாளில் மில்லியனை கடந்த ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான இன்ஸ்டகிராமை தொடங்கினார்.

பாலிவுட்டில் தடம் பதித்துள்ள நயன்தாரா, பாலிவுட் சூப்பர் ஹீரோ ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரே நயன்தாரா அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை காட்டப்போகிறார் என்பதை கூறுகிறது.

இதற்கிடையே இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். உயிர், உலகு என குழந்தைகளுக்கு பெயர் வைத்த நயன்தாரா, அடிக்கடி குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தளத்தில் பகிர்ந்து வந்தார்.

ஓணம் பண்டிகையை குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தளத்தில் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா முதன் முதலாக தனது குழந்தைகளின் முகத்தை வெளிஉலகிற்கு காட்டினார். ’நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்ற கேப்ஷனுடன் குழந்தைகளுடன் ஜாலியாக நடந்து வரும் நயன்தாராவை பார்த்த ரசிகர்களும் குஷியாகினர். இது மட்டும் இல்லாமல் ஜவான் படத்தில் டிரெய்லரும் இன்ஸ்டகிராமில் பகிர்ந்து கொண்டார். 

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...