Newsகர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்!

கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்!

-

அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் திருட்டில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டத்தில அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஓஹியோ வெஸ்டர்வில்லில் உள்ள க்ரோகர் வணிக வளாகத்தில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட தாகியா யங் என்ற கர்ப்பிணி பெண் பொலிஸாரால் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது பிளெண்டன் டவுன்ஷிப் பொலிஸ் அதிகாரிகள் காரில் சாரதி இருக்கையில் அமர்ந்து இருந்த கர்ப்பிணியான தாகியா யங்-கை நெருங்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

அதில், தாகியா யங் நோக்கி பொலிஸார், “நீங்கள் வணிக வளாகத்தில் இருந்து பீர் பாட்டிலை திருடியதை ஊழியர்கள் கண்டுபிடித்து உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர், எனவே உடனடியாக காரில் இருந்து வெளியேறுங்கள்” என அறிவுறுத்துகின்றனர்.

அதற்கு, ”தான் எதையும் திருடவில்லை என்று பதிலளித்து காரின் பக்கவாட்டு கண்ணாடியை லேசாக திறந்து வைத்து கொண்டு பொலிஸாருடன் தாகியா யங் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

ஒரு கட்டத்தில் காரை முன் செலுத்த தாகியா யங் முயற்சிக்கவே காரின் முன் பக்கத்தில் நின்ற மற்றொரு பொலிஸ் அதிகாரி காரின் முன் கண்ணாடியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் தாகியா யங் காயமடைய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கட்டிடத்தின் சுவரில் இடித்து நின்றது. உடனடியாக அவசர உதவிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்து, சம்பவ இடத்தில் இருந்து காயமடைந்த தாகியா யங்-கை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், துரதிஷ்டவசமாக தாகியா யங் மருத்துவமனையில் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

Latest news

அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலைக் கழுகு தேர்வு

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்தாா். வெண்தலைக் கழுகுகள் அறிவியல் ரீதியாக “ஹாலியேட்டஸ் லுகோசெபாலஸ்”...

முதல் முறையாக வெளிநாடு செல்லும் காதலர்களுக்கான அறிவுரை

மனைவியுடன் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் வழிகாட்டிகளை 'சிஎன் டிராவலர்' வெளியிட்டுள்ளது என்பதும் சிறப்பு. அதன்படி, அவர்கள் தங்களது முதல் வெளிநாட்டுப்...

விக்டோரியாவில் உள்ள நீரில் கண்டறியப்பட்டுள்ள ஒரு அசாதாரண வைரஸ்

விக்டோரியாவில், எங்கள் நீரில் ஒரு அசாதாரண வைரஸ் போக்கு ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் நடத்தப்பட்ட வழக்கமான கழிவுநீர் மாதிரி சோதனையின் போது இது...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

சாதனை படைத்தது MCG-யின் முதல் நாள் வசூல்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) 26ம் திகதி தொடங்கிய Boxing Day டெஸ்ட் போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். அதன்படி, முதல் நாளில் Boxing Day...