Newsமுக்கிய 3 நாடுகளுக்கு தடை விதித்த நோபல் பரிசு விழா

முக்கிய 3 நாடுகளுக்கு தடை விதித்த நோபல் பரிசு விழா

-

சுவீடனில் இடம்பெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதர்களை அழைப்பு விடுக்க போவதில்லை என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸ் தூதர்களை நோபல் அறக்கட்டளை புறக்கணித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த வியாழன் (31) வெளியிட்ட அறிவிப்பில் கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நாடுகளின் தூதர்கள் இந்த ஆண்டு அழைக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தது.

நோபல் அறக்கட்டளையின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

உக்ரைன் மீதான ரஷ்யவின் படையெடுப்பு, ஈரான் அரசின் மனித உரிமை மீறல் மற்றும் பெலாரஸ் ஜனாதிபதியின் சட்டவிரோத ஆட்சி ஆகியவற்றை கண்டிக்கும் விதமாக இந்த விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, ரஷ்யா, ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் ஸ்டாக்ஹோமில் நடக்க உள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் வீதியில் தீப்பிடித்து எரிந்த இரசாயன லாரி

குயின்ஸ்லாந்தில் ரசாயனங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Charleville-இற்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Bakers Bend-இல்...

நோயை முன்கூட்டியே கண்டறியும் Smart Pen

Parkinson நோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக விஞ்ஞானிகள் ஒரு ஸ்மார்ட் பேனாவை உருவாக்கியுள்ளனர். Parkinson நோயை முன்கூட்டியே கண்டறிவது மருத்துவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். மேலும் இது...

அவசரநிலை காரணமாக மூடப்பட்ட Darling Downs மிருகக்காட்சிசாலை

குயின்ஸ்லாந்தில் உள்ள Darling Downs மிருகக்காட்சிசாலையில் சிங்கம் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார். மிருகக்காட்சிசாலை ஒரு அறிக்கையில், காலையில் சிங்கக் கூண்டை சுத்தம் செய்வதற்காக ஊழியர் தனது...

டெக்சாஸ் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை...