Newsஎலான் மஸ்க் உயிருக்கு ஆபத்து - வெளியான அதிர்ச்சி தகவல்

எலான் மஸ்க் உயிருக்கு ஆபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்

-

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க், தனது பிரமாண்ட திட்டங்களுக்கும், அதிரடி முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர்.

மின்சார கார் தயாரிக்கும் டெஸ்லா, தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் விண்வெளியிலிருந்து இயங்கும் இணைய சேவைக்கான தனியார் விண்கலன்களான ஸ்டார்லிங்க் சேவை உட்பட பல்வேறு முக்கிய நிறுவனங்களை தொடங்கி நிர்வகித்து வரும் மஸ்க், கடந்த வருடம் உலகின் முன்னணி சமூக உரையாடல்களுக்கான வலைதளமான ட்விட்டரையும் சுமார் ரூ.37 ஆயிரம் கோடிக்கு ($ 44 பில்லியன்) வாங்கினார்.

‘அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் மஸ்க்கின் தாக்கம் இருக்கிறது. விண்வெளி ஆதிக்கம், உக்ரைன் போர், சமூக வலைதளம் கட்டுப்பாடுகள், மின்சார வாகனங்கள் குறித்த சட்டங்கள் உட்பட பல விஷயங்களில் அரசு வகுக்கும் திட்டங்களிலும், எடுக்கும் முடிவுகளிலும் மஸ்க் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார்.

உக்ரைன் போரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் விண்கலன்கள் முக்கிய பங்காற்றியது. மஸ்க், ட்விட்டரை விலைக்கு வாங்கிய பிறகு தனக்கு உலக அரங்கில் மிகவும் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனே அறிவித்தார்’ என விவரித்து ‘எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்’ என பெயரிட்ட ஒரு நீண்ட கட்டுரையில் அமெரிக்காவின் பிரபலமான ‘தி நியூயோர்க்கர்’ எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ‘எனது மகன் உயிருக்கு ஆபத்து வரலாம் என அச்சப்படுகிறேன்’ என இக்கட்டுரையின் நோக்கத்தை விமர்சித்த எலான் மஸ்கின் தந்தை எர்ரால் மஸ்க் (77) இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பாதுகாவலர்கள் புடைசூழ எலான் மஸ்க் அலுவலகத்தில் வலம் வருவதாக சில மாதங்களுக்கு முன் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) நிறுவன பணியாளர்கள் சிலர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆஸ்திரேலியாவின் ராக்கெட் ஏவுதல் தாமதம்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வடக்கு குயின்ஸ்லாந்திலிருந்து நேற்று காலை விண்வெளிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத ஒரு பிரச்சினை காரணமாக தாமதத்தை சந்தித்துள்ளதாக Gilmour Space...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

பசுமைக் கட்சியின் புதிய தலைவராக Larissa Waters பதவியேற்பு

மெல்பேர்ணில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், பசுமைக் கட்சியின் ஐந்தாவது தலைவராக Larissa Waters தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைமைப் பதவிக்கு அவருடன் போட்டியிட்ட Mehreen Faruqi துணை எம்.பி.யாகவும்,...