Newsசீன பெருஞ்சுவரை சேதப்படுத்திய நபர்களுக்கு நேர்ந்த கதி

சீன பெருஞ்சுவரை சேதப்படுத்திய நபர்களுக்கு நேர்ந்த கதி

-

சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

13 ஆம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரின் 32-வது பகுதி கலாசார நினைவு சின்னங்களில் ஒன்றாக தற்போது உள்ளது.

4 ஆயிரம் மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று. கடந்த 1987 ஆம் ஆண்டு சீன பெருஞ்சுவர் ஆனது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது.

இந்த நிலையில், வடக்கு ஷாங்சி மாகாணத்தில் யாங்கியான்ஹே நகர பகுதியில் உள்ள சீன பெருஞ்சுவரின் ஓரிடத்தில் இடைவெளி காணப்பட்டதை அடுத்து அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் இதனை சிலர் சேதப்படுத்தியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இது பற்றிய விசாரணையில், 38 வயது ஆண் மற்றும் 55 வயது பெண் என இருவர் அதனை சேதப்படுத்தியது தெரிய வந்தது. அந்த பகுதி வழியே கடந்து செல்வதற்காக, அவர்கள் இந்த செயலை செய்துள்ளனர்.

மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...