பூர்வீக விலங்குகளுக்கு காட்டுப் பூனைகளின் அச்சுறுத்தலைக் குறைக்கும் வகையில், காட்டுப் பூனைகளின் எண்ணிக்கையை ஒடுக்க மத்திய அரசு ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளது.
இது தொடர்பில் மக்களின் கருத்துக்களைக் கேட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அது முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் சுமார் 02 பில்லியன் பறவைகள், ஊர்வன, பூச்சிகள் மற்றும் பாலூட்டிகள் காட்டுப் பூனைகளால் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் இறக்கும் விலங்குகளின் எண்ணிக்கை சுமார் 60 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் வருடாந்த சேதம் 19 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 1.4 முதல் 5.6 மில்லியன் காட்டுப் பூனைகள் வாழ்கின்றன என்று சுற்றுச்சூழல் துறை மதிப்பிடுகிறது.
இதனைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், உள்ளூர் விலங்குகள் அழியும் அபாயம் ஏற்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் தன்யா சகசயர்யனா தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத கட்டுப்பாட்டு முறைகளுக்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.