மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 153 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொராக்கோவின் மராகேஷில் இருந்து தென்மேற்கே 71 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைப்பகுதியில் 18.5 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அட்லஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் தலைநகர் ரபாத்தில் 350 கிலோமீட்டர் தொலைவில் உணரப்பட்டதாகவும், அதே போல் காசாபிளாங்கா மற்றும் எஸ்சாவ்ரா நகரங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.