அவுஸ்திரேலிய சிறைகளில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 7 வீதத்தால் குறைந்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 2 வீதத்தால் குறைந்து 14,864 ஆக உள்ளது.
தற்போது சிறைகளில் உள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை 40,591 ஆகும், இது 2021 ஆம் ஆண்டை விட 6 சதவீதம் குறைந்துள்ளது.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கைதிகள் இதுவாகும்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளின் எண்ணிக்கை 13 சதவீதத்தாலும், திருட்டு தொடர்பான கைதிகளின் எண்ணிக்கை 11 சதவீதத்தாலும் குறைந்துள்ளது.