Newsசிட்னியில் 14 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடூர சித்திரவதை!

சிட்னியில் 14 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடூர சித்திரவதை!

-

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சொந்த பிள்ளைகள் 14 பேர்களை குடியிருப்புக்குள் பூட்டி வைத்து கொடூர சித்ரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் தாயாரும் தந்தையும்.

குறித்த இருவர் மீதும் மொத்தமாக 60 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில குழந்தைகள் சாட்டையால் அடித்தும் கொடூரமாக தாக்கியும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் சில நேரங்களில் செல்லப்பிராணிகளுக்கு அளிக்கப்படும் தரமற்ற உணவு வகைகளை பிள்ளைகளுக்கும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் பிறந்த அந்த 44 வயது தாயார் மீது வீட்டை அழித்து சேதப்படுத்தியதாகவும், தமது பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அறிந்தும், அதை மறைத்து, பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அந்த தந்தை அரேபிய மொழி பேசும் நாட்டவர் என்றும், தற்போது 56 வயதாகும் அவர் சொந்த நாட்டில் கட்டாய ராணுவ சேவைக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியவர் எனவும், அப்படியான நடவடிக்கையானது அந்த காலகட்டத்தில் மரண தண்டனைக்கு நிகரான குற்றமாகும்.

இந்த நிலையில் சில காலம் தடுப்புக்காவலில் இருந்த அந்த நபர், அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றுள்ளார். தொடர்ந்து பிரித்தானிய வம்சாவளி அவுஸ்திரேலிய பெண்ணை மணந்தார், இவர் பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தார்.

இந்த இருவருமே தங்கள் குடும்பத்தை கொடூரமான நிலைமையில் வைத்திருந்தனர். அந்த தந்தை சலவை இயந்திரங்களை பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார் எனவும், தமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பதை அவர் ஆதரித்தும் வந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

தற்போது அந்த பிள்ளைகள் அனைவரும் காப்பகங்களில் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், இவர்களில் இரண்டு மூத்த பெண்கள் தங்கள் பெற்றோர் தொடர்பில் பதிவு செய்த துஸ்பிரயோக காணொளி ஒன்றை அதிகாரிகளுக்கு ரகசியமாக அனுப்பி வைத்ததை அடுத்தே இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...