Newsபிரபஞ்சத்தில் சூரியனைப் போன்று பிறந்ததிருக்கும் புதிய நட்சத்திரம்

பிரபஞ்சத்தில் சூரியனைப் போன்று பிறந்ததிருக்கும் புதிய நட்சத்திரம்

-

சூரியனைப் போன்ற நட்சத்திரம் ஒன்று புதிதாக பிறந்துள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கு சான்றாக நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியினால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினையும் நாசா வெளியிட்டுள்ளது.

பிரபஞ்சத்தின் இரகசியத்ங்களை அறிய இந்த ஆண்டு அமெரிக்காவின் நாசாவினால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியும் சூரிய குடும்பத்திற்கு வெளியே வெகு தொலைவில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களை துல்லியமாக படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்து வருகிறது.

இந்நிலையில், ஒரு புதிய நட்சத்திரம் உருவாகியிருப்பதனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அடையாளம் கண்டு அதன் புகைபடத்தை தற்போது அனுப்பி நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இந்த நட்சத்திரம் அதிக நிறை உடையதாகவும் துருவப் பகுதியில் இருந்து சூடான காற்றை வெளியேற்றி வருவதாகவும், புகைப்படத்தை வைத்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து முடிவு வெளியிட்டுள்ளனர்.

இந்த நட்சத்திரம் முழுமையாக உருவானதன் பின் அது சூரியனை போன்ற தோற்றம் கொண்டதாக இருக்கும் என்றும்.

சூரியன் உருவாகும் போது எப்படி இருந்ததோ அதை போன்ற வடிவத்தில் இந்த நட்சத்திரம் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இந்த நட்சத்திரத்திற்கு குழந்தைச் சூரியன் (Baby Sun) என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளார்கள்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...