ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 கையடக்க தொலைபேசி அதிகளவிலான கதிர்வீச்சை வெளியிடுவதாக அண்மையில் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இதை திட்டவட்டமாக ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது .
கடந்த 2007 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது.
ஸ்மார்ட் கைத்தொலைபேசி வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது.
இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட் கைத்தொலைபேசி வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம் தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் தெரிவித்துள்ளன.
தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மொடல் கைத்தொலைபேசிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும்.
அந்த வகையில் முதல்முறையாக யுஎஸ்பி-சி டைப் போர்ட் உடன் ஐபோன் 15 சீரிஸ் கையடக்க தொலைபேசி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தச் சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 12, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகளவில் கதிர்வீச்சை வெளியிட்டு வருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதனை அந்த நாட்டின் தேசிய ஃப்ரிக்வென்சி முகமை (AFNR) தெரிவித்துள்ளது. அதன்பேரில் பிரான்ஸ் நாட்டில் ஐபோன் 12 விற்பனைக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், மென்பொருள் அப்டேட் செய்வதன் மூலம் இதை நிறுத்த முடியும் என்றும். அப்படி அதை செய்ய தவறினால் புழக்கத்தில் உள்ள ஐபோன் 12 கைத்தொலைபேசிகளை திரும்ப பெற உத்தரவு பிறப்பிக்கப்படும் என பிரான்ஸ் அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் தெரிவித்துள்ளார்.
இதற்கு 2 வாரம் காலம் ஆப்பிள் நிறுவனத்துக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி தமிழன்