புகழ்பெற்ற சிட்னி மாரத்தான் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இதில் 40,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வதுடன், அவுஸ்திரேலியா வரலாற்றிலேயே அதிகளவானோர் மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியமை விசேட அம்சமாகும்.
இதன் காரணமாக பல அத்தியட்சகர்களின் கீழ் அதிகாலை 03.30 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை பல வீதிகளும் மூடப்படவுள்ளன.
மேலும், பொது போக்குவரத்து சேவை நேரங்கள் திருத்தப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போட்டியின் போது கூடுமானவரை தனியார் வாகனங்கள் சிட்னி பகுதிக்குள் நுழைவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைக்க அதிகபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.