குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பரவி வரும் 02 காட்டுத்தீகள் குறித்து பிரதேசவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளாஸ் ஹவுஸ் மலை தேசிய பூங்கா எல்லைக்குள் உள்ள 02 பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள எமரால்டு நகருக்கு அருகில் காட்டுத் தீ பரவுவது குறித்து மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ அபாய வரைபடத்தில் உள்ளடங்கியுள்ள ஏனைய பிரதேசங்களில் உள்ள மக்களும் அனர்த்த எச்சரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.