ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மிச்செல் புல்லக் இன்று பதவியேற்றார்.
1959ல் ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட பிறகு இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பதும் சிறப்பு.
07 வருடங்களாக இப்பதவியை வகித்த கலாநிதி பிலிப் லாவின் பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்தது.
கடந்த 14 மாதங்களில், 11 சந்தர்ப்பங்களில் வட்டி விகித மதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக அவர் பல தரப்பினரால் விமர்சிக்கப்பட்டார்.
மிச்செல் புல்லக் அறிவிக்கும் முதல் வட்டி விகித முடிவு அக்டோபர் 3 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.