Cinemaநடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை

-

நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா, சேர்ச் பார்க் பாடசாலையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று இரவு நேரத்தில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை வீட்டின் பணியாளர் பார்த்து அலறியுள்ளார்.

இதன்பின் காவேரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு சொல்லப்பட்டாலும் சிறுமி மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவத்தின்போது நடிகர் விஜய் ஆண்டனி வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

இன்றுமுதல் இடைநிறுத்தப்பட்டும் ‘Cashrewards’ இணையதளம்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான cashback வலைத்தளமான Cashrewards, இன்று முதல் அதன் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. புதிய பரிவர்த்தனைகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவது இன்று மதியம் 12 மணிக்குப் பிறகு...

செம்மறி ஆடுகளை வாகனத்தில் விசித்திரமாக கொண்டு சென்ற ஆஸ்திரேலிய விவசாயி

ஆஸ்திரேலிய விவசாயி ஒருவர் தனது வாகனத்தின் முன்பக்கத்தில் செம்மறி ஆடுகளை ஏற்றிக்கொண்டு வாகனம் ஓட்டுவதைக் காட்டும் புகைப்படம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படம், Eyre...