90களின் முற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் அடுத்த 02 வருடங்களில் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதத்தை நாடு பதிவு செய்யக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
பணவீக்கம் மற்றும் உலகளாவிய உறுதியற்ற தன்மை ஆகியவை ஆஸ்திரேலியாவில் மெதுவான பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் காட்டுவதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
இதன்படி, அடுத்த வருடத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறைந்தபட்ச பெறுமதியான 1.3 சதவீதமாக வீழ்ச்சியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், 1.5 சதவீதமாகவே இருக்கும் என திறைசேரி கணித்துள்ளது.
பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும், அதைச் சமாளிப்பதற்கு பொருத்தமான சூழல் நாட்டில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.