அவுஸ்திரேலியாவில் தேசிய பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவிகளை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தலைநகர் கேன்பராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது இளைஞர் ஒருவர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த 24 வயதுடைய இளைஞர் 2 மாணவிகள் உள்பட 3 பேரை கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் படுகாயமடைந்த மாணவி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தாக்குதல் சம்பவம் குறித்து குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞர் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் அவர் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.