Sportsஐரோப்பிய கிளப் வரலாற்றில் முத்திரை பதித்த ஈழத் தமிழர்

ஐரோப்பிய கிளப் வரலாற்றில் முத்திரை பதித்த ஈழத் தமிழர்

-

நோர்வேயின் முக்கியமான கால்பந்தாட்ட கிளப்களில் ஒன்று FK Haugesund. இதன் முதன்மை பயிற்சியாளராக சஞ்சீவ் (சண்) மனோகரன் என்ற இலங்கைத் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் இதே கிளப்பின் வளர்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த அவர், தற்போது தற்காலிக முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

டென்மார்க்கில் பிறந்து வளர்ந்த சஞ்சீவ் மனோகரன். இந்த கிளப்பில் இணையும் முன் பத்தாண்டுகளுக்கு மேலாக டென்மார்க்கின் சூப்பர் லிகா தொடரில் இடம் பெற்று விளையாடும் ஏசிஎஃப் கிளப்பின் 10 வயது முதல் 19 வயது வரையிலான ஜூனியர் அணிகளுக்கான பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.

ஐரோப்பாவின் UEFA தேர்வில் தேர்ச்சி பெற்று இவர் உதைபந்தாட்ட பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் மகள்வழி பேரன் ஆவார்.

ஐரோப்பிய நாடுகளின் முதல்தர கால்பந்து கிளப் அணிகளில் பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்ற முதல் இலங்கைத் தமிழர் சஞ்சீவ் (சண்) மனோகரன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட 50 சர்வதேச குற்றவாளிகள்

10 நாடுகளில் ஏராளமான குற்றங்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திட்டத்தின் ஒரு...

மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி

இந்த ஆண்டு மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அதன்படி, மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் பதவி தொழிலாளர் கட்சி வேட்பாளர் ரோஜர்...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வேலைகளில் உதவாத ஆண்கள் – சமீபத்திய வெளிப்பாடு

ஆஸ்திரேலியாவில் ஆண்கள் இன்னும் வீட்டு வேலைகளில் உரிய கவனம் செலுத்துவதில்லை என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியப் பெண்கள் ஆண்களை விட வீட்டு வேலைகளைச் செய்வதில்...

ஆஸ்திரேலியா விமான நிலையங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவின் இரண்டாம் நிலை விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மெல்பேர்ணில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் விக்டோரியா...

மீண்டும் சேவையை தொடங்குகின்றன குயின்ஸ்லாந்து விமானங்கள்

குயின்ஸ்லாந்து விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பிரிஸ்பேர்ண் மற்றும் கோல்ட் கோஸ்ட் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் இன்னும் ரத்து...

ஆஸ்திரேலியா விமான நிலையங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவின் இரண்டாம் நிலை விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மெல்பேர்ணில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் விக்டோரியா...