தெற்கு ஆஸ்திரேலிய மாநில காவல்துறைக்கு தகுதி வாய்ந்த 200 வெளிநாட்டு அதிகாரிகளை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்கள் கிரேட் பிரிட்டன் – அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பணியமர்த்தப்பட உள்ளனர்.
தற்போதுள்ள பணியிடங்களை விரைவில் நிரப்புவதே இதன் நோக்கம்.
இது தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை மற்றும் விசா வழங்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு அடுத்த ஆண்டு மத்தியில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.