எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் 3 வயதுடைய சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல் திறன் பயனர்களை வியக்க வைத்துள்ளது.
நெய்ஜியாங் பகுதியை சேர்ந்த அந்த சிறுவர்கள் சமையல் பாத்திரத்தை பெரியவர்களை போன்று கையாளுகின்றனர்.
அவர்கள் ப்ரைடு ரைஸ் செய்வது, அதனுடன் முட்டைகளை சேர்த்து கிளறுவது என சமையலில் அசத்தும் காட்சிகளை பார்த்த பயனர்கள் அவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.