ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட், உலகின் முன்னணி சர்வதேச ஊடகங்களில் ஒன்றான ஃபாக்ஸ் மீடியா நெட்வொர்க்கின் இயக்குநர்கள் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
உலக ஊடக ஜாம்பவான்களில் ஒருவரான ரூபர்ட் முர்டோக் ஃபாக்ஸ் ஊடக வலையமைப்பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து ஒரு நாள் கழித்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
டோனி அபோட்டின் நியமனம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் நிர்வாகக்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபாக்ஸ் மீடியா நெட்வொர்க்கின் போர்டு உறுப்பினரின் மொத்த ஆண்டு சம்பளம் 05 லட்சம் டாலர்கள்.
டோனி அபோட் ஆஸ்திரேலியாவின் பிரதமராக 2013 முதல் 2015 வரை பதவி வகித்தார்.