அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ரொபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதிலுமிருந்து 12,500 தன்னார்வலர்கள் இந்த கோயிலை கட்டியுள்ளனர்.
183 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கோயில் உலகின் மிகப்பெரிய 2-வது இந்து கோயில் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்டிற்கு அடுத்த படியாக நியூ ஜெர்சியில் உள்ள இந்த கோயில் இரண்டாது பெரிய கோயிலாக கருதப்படும்.
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அங்கோர்வாட் கோயில் வளாகம், உலகின் மிகப்பெரிய இந்து கோயிலாகும்.
இது, 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இதனை அங்கீகரித்துள்ளது.