Newsசீனாவின் எச்சரிக்கையை மீறும் அவுஸ்திரேலியா

சீனாவின் எச்சரிக்கையை மீறும் அவுஸ்திரேலியா

-

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் கடந்த 1949-ஆம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. எனினும் சமீபகாலமாக தாய்வானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என சீனா கருதுகின்றது.

மேலும் தாய்வானுடன் மற்ற நாடுகள் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சீனாவின் எச்சரிக்கையை மீறி அவுஸ்திரேலியாவில் இருந்து 6 அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவினர் தாய்வானுக்கு விஜயம் செய்துள்ளனர்.

தாய்வானுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, எரிசக்தி குறித்து இரு தரப்பினரும் விவாதித்துள்ளனர்.

இதனால் சீனா கடும் கோபமடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் பார்லி போன்ற ஏற்றுமதி பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையினால் சீனா-அவுஸ்திரேலியா உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது.

அதனை மறுசீரமைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அமைச்சர்களின் இந்த விஜயத்தினால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த உள்ள பிரபல மருந்து நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான Chemist Warehouse, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த அமைப்பு விரைவில் நாடு முழுவதும்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் Home Equity Access Scheme-ஐ பயன்படுத்தி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2020ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற அரசு வீடுகளைப்...

2025ல் மலிவு விலையில் செல்லக்கூடிய நாடுகள் குறித்து புதிய அறிக்கை

2025 ஆம் ஆண்டில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் மலிவு விலையில் செல்லும் இடங்கள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்கைஸ்கேனர் அறிக்கையின்படி,...

மெல்பேர்ணில் உள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய Food Relief Kitchen

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய உணவு நிவாரண சமையலறை மெல்பேர்ணில் திறக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகவும் நம்பகமான இரண்டு தொண்டு நிறுவனங்களான SecondBite மற்றும் FareShare ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தைத்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்களுக்கான புதிய அறிமுக நிகழ்ச்சி

தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்களுக்கான புதிய அறிமுக நிகழ்ச்சியை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, வெல்கம் டு சவுத் அவுஸ்திரேலியா திட்டத்தில் குடியேறியவர்கள் இலவசமாக பதிவு...