Newsமேற்கு ஆஸ்திரேலியா போலீஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா பெறுவதில் உள்ள...

மேற்கு ஆஸ்திரேலியா போலீஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா பெறுவதில் உள்ள சிரமங்கள்

-

மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது.

புதிய ஆட்சேர்ப்பின் கீழ், மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்கு ஏற்கனவே 30 வெளிநாட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் விசா நிராகரிப்பு காரணமாக கணிசமானோர் அந்த வாய்ப்புகளை நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சில அதிகாரிகளுக்கு விசா கிடைத்தாலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு உடல்நலக் காரணங்களால் விசா கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இதேவேளை, கடந்த 12 மாதங்களில் மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்காக சுமார் 1,400 சர்வதேச விண்ணப்பங்கள் வந்துள்ளன.

எதிர்வரும் 05 வருடங்களில் பிரித்தானியா, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 750 வெளிநாட்டு அதிகாரிகள் மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

ஆட்சேர்ப்பு விழாவில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் Claire O’Neill, குடிவரவு சட்டங்கள் தொடர்பாக நாட்டில் நெருக்கடி நிலவுவதாகவும், அது தொடர்பான பிரச்சனைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...