அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலம் கன்சாஸ்ஸில் (Kansas) வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஜேலி சில்ஸன் (Jaylee Chillson) எனும் 14 வயது சிறுமி, சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடி விட்டாள் என தகவல் வெளியானது.
இத்தகவல் க்ளவுட் கவுன்டி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. ஜேலி தனது நண்பர்களுடன் ஊருக்கு வெளியே உள்ள அரோரா எனும் புறநகர் பகுதியில் ஒரு வெட்டவெளி விருந்தில் கலந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு முதற்கட்ட தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அவளை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். அப்போது ஒரு பொலிஸ் அதிகாரி அவள் தப்பி செல்லாதவாறு இருக்க அவளை பிடிக்க முயன்றார்.
ஆனால், அதிகாரிகள் என்ன சொல்லியும் கேட்க மறுத்த குறித்த சிறுமி, ஒரு கட்டத்தில் திடீரென ஒரு துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொண்டார்.
குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விருந்துக்கு வந்திருந்த பலரிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது மகளை பறி கொடுத்த ஜேலியின் தந்தை உருக்கமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.