சீனாவின் எச்சரிக்கையை மீறி அவுஸ்திரேலியாவின் 6 எம்.பிக்கள் கொண்ட குழு தைவானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
1949ம் ஆண்டு சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது, ஆனால் சமீபகாலமாக தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா பகிரங்கமாக அறிவித்து வருகிறது.
மேலும் தைவானுடன் மற்ற உலக நாடுகள் நேரடி தூதரக உறவுகள் எதையும் வைத்துக் கொள்ள கூடாது என்றும் சீனா அறிவித்து வருகிறது.
இந்நிலையில் தைவானுடனான எரிசக்தி, மற்றும் செமி-கண்டக்டர் துறை ஆகியவற்றில் பொருளாதார ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவின் 6 எம்.பிக்கள் கொண்ட குழு தைவானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையில் சீனாவுக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவில் உரசல் நிலவி வந்தது.
அதை சீராக்க இருநாட்டு அரசாங்கமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர், ஆனால் இந்த சமயத்தில் அவுஸ்திரேலிய எம்.பி-களின் தைவான் பயணம் இருநாட்டு உறவில் புகைச்சலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய எம்.பிக்களின் இந்த பயணத்தை கண்டித்து சீனா அவுஸ்திரேலியாவின் பார்லி மற்றும் பிற ஏற்றுமதி பொருட்களுக்கான கூடுதல் வரியை நிர்ணயித்துள்ளது.