Newsஅமேசான் காடுகளில் ஏற்படப்போகும் வறட்சி அபாயம் - காலநிலை மாற்றமே காரணம்

அமேசான் காடுகளில் ஏற்படப்போகும் வறட்சி அபாயம் – காலநிலை மாற்றமே காரணம்

-

உலகின் நுரையீரலாக அமேசான் காடுகள் செயல்படுகின்றன. சனத் தொகை வெளியிடும் கரியமில வாயுக்கள் உள்ளிட்ட நச்சுகளை சுத்திகரித்து ஒக்சிஜன் என்னும் உயிர்காற்றை உற்பத்தி செய்து வருகிறது.

அமேசான் மலைக்காடுகளின் 60 சதவீதப்பகுதி தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ளது.

இந்நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அமேசானில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காட்டுத்தீ பரவியது.

கட்டுங்கடங்காத காட்டுத்தீ காரணமாக காடுகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. அங்கு உள்ள அணைகள் உள்ளிட்ட நீர்தேக்க நிலையங்களின் கொள்ளளவு குறைந்து வருகிறது.

எனவே வரும் காலங்களில் அங்கு வறட்சி ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

பூர்வ பழங்குடிகள் உட்பட 5 இலட்சத்திற்கும் அதிகமான பிரேசில் மக்கள் வறட்சியினால் பாதிக்கப்படுவர் என பிரேசில் நாட்டின் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 166 கோடி ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டு நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...