Newsசரியாக பொருத்தாததால் பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்

சரியாக பொருத்தாததால் பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்

-

இளம்பெண் ஒருவரின் கையில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனம், நழுவி இதயத்துக்குள் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில், 22 வயதாகும் க்ளோயி வெஸ்டர்வே என்ற இளம்பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கையில் கருத்தடை சாதனம் பொறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவருக்கு வாந்தி, நெஞ்செரிச்சல், அதிகப்படியான ரத்தப்போக்கு, படபடப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

எனவே, அவர் மருத்துவமனைக்குச் சென்று, அந்த கருத்தடை (ஹார்மோன் சுரப்பிகளை தூண்டும் கருவி) அகற்றிக்கொள்ள முடிவு செய்தார். அதற்காக மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அவரது கையில் பொருத்தப்பட்டிருந்த கருத்தடை சாதனம் பொருத்திய இடத்தில் காணவில்லை. தேடிப்பார்த்த மருத்துவர்கள், அப்பெண்ணின் இதயத்தை உறையவைக்கும் ஒரு செய்தியை சொன்னார்கள்.

அதாவது, கருத்தடை சாதனம் உடலில் சரியாக பொருத்தப்படாததால், அது நழுவி உடலின் வேறு இடத்துக்குச் சென்றிருக்கலாம் என்றும், இப்போது அதனை அகற்ற வேண்டும் என்றால் மிகப்பெரிய அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்பதே மருத்துவர்கள் சொன்ன தகவல்.

மருத்துவப் பரிசோதனையில், அந்தக் கருவி உடலின் இரத்த ஓட்டத்தில் நழுவி, வலது இதயத்தின் அறைக்குள் நுழைந்துவிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

4 செ.மீ. அளவுள்ள அந்தக் கருத்தடை சாதனம், நெகிழும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கால் ஆனது. அது கையில் சிறு அறுவை சிகிச்சை மூலம் தோலுக்கு அடியில் பொருத்தப்படும். இது இரத்தத்தில் புரோஜெஸ்டெரோனை வெளிப்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு மாதமும் சினை முட்டை வெளிப்படுவது நிறுத்தப்படும்.

நாள்தோறும் கருத்தடை மாத்திரை சாப்பிட முடியாதவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு இந்த கருத்தடை சாதனத்தை கையில் பொருத்திக் கொள்ளலாம். இது கருவுறுதலைத் தடுக்க பயன்படுத்தப்படும் கருவியாகும். பல்வேறு கருத்தடை வழிமுறைகளில், இந்த சாதனமானது மிகவும் பாதுகாப்பானதாகவும், ஏராளமானோர் பயன்படுத்தி வருவதும் குறைவான பக்கவிளைவுகளைக் கொண்டதுமாக அறியப்படுகிறது.

க்ளோயியை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த சாதனம் சரியாக பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்னர்.

கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதும், தனக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. நாளடைவில்தான் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. உடனடியாக அதனை அகற்றிவிடலாம் என்று நினைத்தால், இப்படி நேர்ந்துவிட்டது என்கிறார் க்ளோயி.

கருத்தடை சாதனத்தை அகற்ற நினைத்த மருத்துவர்களுக்கு, அது அங்கே இல்லாததால் கடும் அதிர்ச்சிதான் முதலில் ஏற்பட்டது. என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. இங்கிருந்து அது எங்கே சென்றிருக்கும் என்றே தெரியவில்ல். இதற்கு முன்பு இப்படி ஒரு விஷயம் நடந்ததும் இல்லை. அப்பெண்ணிடம் என்ன சொல்வது என்றே தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாக மருத்துவர்களும் தெரிவிக்கிறார்கள்.

தற்போது மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்காக க்ளோயி காத்திருக்கிறார். முதலில் அவரது நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்து பிறகு, இதயத்தில், நெஞ்சுக்கூட்டைத் திறந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதிலிருந்து அவர் குணமடைய 2 அல்லது 3 மாதங்கள் கூட ஆகலாம்.

இதற்கெல்லாம் மேலாக, மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், உண்மையிலேயே அந்த கருத்தடை சாதனம் துல்லியமாக எங்கிருக்கிறது என்பதை கண்டறிய இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்பதே.

இங்கிலாந்தின் மருத்துவ வரலாற்றில், இதற்கு முன்பு, இதுபோன்ற 126 சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், 18 பேருக்கு அது நுரையீரலில் இருந்தும், மற்றவர்களுக்கு இதயத்திலிருந்தும் மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Latest news

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

Bondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, பிரித்தானியா முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. Bondi...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

அடிலெய்டில் பெண் ஒருவரை கொலை செய்த நபர்

அடிலெய்டின் parklands-இல் ஒரு பெண்ணைக் கொலை செய்ததாக 37 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்து அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி...