Newsமுட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

-

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பறவைக் காய்ச்சல், வெள்ளம், காட்டுத் தீ போன்றவற்றால் முட்டைத் தொழில் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் தினசரி 18 மில்லியன் முட்டைகள் நுகரப்படுகின்றன, கடந்த நிதியாண்டில் மட்டும் 6.6 பில்லியன் முட்டைகள் நுகரப்பட்டுள்ளன.

மேற்கு ஆஸ்திரேலியாவின் முட்டை தேவையில் 1/4 கிழக்கு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆனால் அவுஸ்திரேலியாவின் கிழக்கு மாகாணங்களில் முட்டை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ஒட்டுமொத்தமாக நாட்டின் முட்டை விநியோகச் சங்கிலியை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல்வேறு நோய்கள் காரணமாக, கிழக்கு ஆஸ்திரேலியாவில் முட்டை உற்பத்தி தொடர்பான கிட்டத்தட்ட 05 லட்சம் விலங்குகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக முட்டையின் விலை வேகமாக அதிகரித்துள்ளதோடு 12 முட்டைகளின் விலை 04 டொலர்களில் இருந்து 08 டொலர்களாக இருமடங்காக அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

உலகின் மிகவும் ஆபத்தான 20 நகரங்களில் ஆஸ்திரேலிய நகரம்

ஆஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் 2024 ஆம் ஆண்டில் உலகின் 20 மிகவும் ஆபத்தான நகரங்களின் சமீபத்திய தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில நகரங்கள் அழகான...

இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரம் பறந்த குவாண்டாஸ் விமானம்

பராமரிப்பு பணியின் போது பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்களால் இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரத்திற்கும் மேலாக பறந்த குவாண்டாஸ் விமானம் தொடர்பான தகவல்...

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...