கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சில தவறுகளுக்கு தற்போதுள்ள தண்டனையை இரட்டிப்பாக்குவதற்கான சட்டத் திருத்தங்கள் மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
பொது இடத்திலோ அல்லது பள்ளியிலோ கூரிய ஆயுதத்தை வைத்திருப்பதும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
அதன்படி தற்போது 02 வருடங்களாக இருக்கும் சிறைத்தண்டனை 04 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளது.
அதே குற்றத்திற்காக தற்போதுள்ள $2,200 அபராதம் ஒரு சாதாரண கத்திக்கு $4,400 ஆகவும் மற்றும் மேம்படுத்தப்பட்ட கத்திக்கு $11,000 ஆகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.