Newsவெப்பநிலை அதிகரிப்பால் நூற்றுக்கணக்கான டொல்பின்கள் உயிரிழப்பு

வெப்பநிலை அதிகரிப்பால் நூற்றுக்கணக்கான டொல்பின்கள் உயிரிழப்பு

-

பிரேசில் நாட்டின் வடமேற்கில் தொடங்கி கொலம்பியா, பெரு உட்பட பல தென் அமெரிக்க நாடுகள் வரை அமேசான் மழைக்காடு பரந்து காணப்படுகின்றது.

வடக்கு பிரேசிலில் அமேசோனாஸ் (Amazonas) மாநிலத்தின் தலைநகரமான மனோஸ் (Manaus) நகருக்கருகே டெஃப் (Tefe) பிராந்தியம் உள்ளது.

இப்பகுதியிலும் அமேசான் காடுகள் பரவியுள்ளது. இப்பகுதி முழுவதிலும் சமீப காலமாக பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

நீர் நிலைகளில் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்பம் 102 டிகிரி ஃபேரன்ஹீட் அளவை தொட்டு விட்டது.

இதன் காரணமாக இங்குள்ள டெஃப் ஏரியில் நூற்றுக்கணக்கான டொல்பின்கள் உயிரிழந்து மிதக்கின்றன.

‘இத்தகைய சம்பவம் இதற்கு முன்பு நடைபெறாதது. டொல்பின் மீன்கள் இறந்ததற்கும் அதிகளவு வெப்பத்திற்கும் தொடர்புள்ளது. ஆனால், வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை’ என பிரேசில் அறிவியல் துறையின் ஆதரவில் இயங்கும் மமிரவா நிறுவனம் (Mamiraua Institute) தெரிவித்துள்ளது.

உயர்ந்து வரும் வெப்ப நிலை காரணமாக அமேசான் காடுகளில் உள்ள நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. பரப்பளவில் கிட்டத்தட்ட அவுஸ்திரேலியாவின் அளவிற்கு பரந்து விரிந்துள்ள இக்காடுகளில் இது போன்ற வானிலை நிகழ்வுகள் நடைபெறுவதால் 1 இலட்சம் பேருக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இயற்கைக்கு எதிரான பல நடவடிக்கைகளில் மனிதர்கள் ஈடுபட்டு வருவதால் இது போன்ற விசித்திரமான பருவநிலை மாற்றங்கள் ஏற்படலாம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர்.

இந்த நிகழ்வு அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து நிலவுகிறது.

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...