விக்டோரியாவில் இன்று கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படும் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வனப்பகுதியில் தீ பரவும் சூழல் நிலவும் ஜிப்ஸ்லேண்ட் பகுதியில் சாரல் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான பகுதிகளில் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பேரிடர் எச்சரிக்கை குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.