சில மாதங்களுக்குப் பிறகு, பூர்வீகக் குரல் வாக்கெடுப்பு முன்மொழிவை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
கார்டியன் ஆஸ்திரேலியா கணக்கெடுப்பு தரவு, கணக்கெடுக்கப்பட்டவர்களில் 43 சதவீதம் பேர் பொதுவாக்கெடுப்பு முன்மொழிவுக்கு ஆதரவாக இருந்தனர்.
இது 02 வீத அதிகரிப்பாகும்.
எவ்வாறாயினும், பொதுவாக்கெடுப்பு பிரேரணைக்கு எதிரான எதிர்ப்பானது தொடர்ந்தும் அதிக மதிப்புடையதாகவே உள்ளது.
06 வீதம் குறைவடைந்துள்ள போதிலும் 49 வீத பெறுமதியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறக்குறைய 08 வீதமான மக்கள் இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் அந்தோனி அல்பானீஸ், பழங்குடியின மக்களுக்கு பல சலுகைகளை வழங்குவதே தமது நோக்கமாகும் என தெரிவித்தார்.
சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் பின்னர் பிளவுகள் நீங்கி அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவோம் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள ஆட்சிகளில் பூர்வகுடி மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பல சலுகைகள் தவிர்க்கப்பட்டுள்ளதால், புதிய திருத்தங்களின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்கும் என வாக்கெடுப்பை ஆதரிப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.