அவுஸ்திரேலியாவில் இளம்பெண்ணொருவர் தனது செல்லப்பிராணிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பெர்த் நகரைச் சேர்ந்த இளம்பெண் நிகிதா பில் (31). இவர் Rottweiler இனத்தைச் சேர்ந்த நான்கு நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்.
அவற்றுக்கு ஹார்லெம், ஃபோர், செவென் மற்றும் பிராங்க்ஸ் என பெயரிட்டார். இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி நிகிதா தனது நாய்களால் தாக்கப்பட்டார். இதில் அவரது கைகள் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததன் பேரில் பொலிஸார் அங்கு விரைந்தனர். பின்னர் நிகிதா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நிகிதாவிற்கு 5 அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அன்றைய தினம் ஒரு நாய்க்கு அவர் பல் துலக்கிவிடாததால், கோரைன் பாக்டீரியா தொற்று அவருக்கு ஏற்பட்டது.
இதனால் அவருக்கு தீவிரமான சிக்கல்கள் உருவாகியிருப்பதாக தெரிவித்த குடும்பத்தினர், நிகிதா ஒரு போராளி அவர் மீண்டு வருவார் என கூறியுள்ளனர்.
இதற்கிடையில், பிராங்க்ஸ் நாயை டெஸர் முறையில் மருத்துவர் பிடிக்கும் முயற்சி தோல்வியுற்றதால், பொலிஸார் அதனை சுட வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாய்கள் தங்கள் உரிமையாளரான நிகிதாவை தாக்க தூண்டியது எது என்பது தெளிவாக தெரியவில்லை.
