ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் முடி உதிர்தலுக்கும் தோல் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
முடி இல்லாத காரணத்தால் மண்டை ஓடு நேரடியாக சூரிய ஒளி படுவதே இதற்கு முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
உச்சந்தலையில் சூரிய ஒளியின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடி அவசியமானது மற்றும் குறைவான முடி உள்ளவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
மண்டை ஓட்டில் நேரடியாக சூரிய ஒளி படுவது ஆண்களுக்கு தேவையான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் உற்பத்திக்கு இடையூறாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவுஸ்திரேலியா தோல் புற்றுநோயால் அதிகம் உயிரிழக்கும் நாடாகக் கருதப்படுவதோடு, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு மரணம் பதிவாகுவதாகக் கூறப்படுகிறது.