Sportsநியூசிலாந்து அணி அபார வெற்றி - உலகக் கிண்ண தொடர் 2023

நியூசிலாந்து அணி அபார வெற்றி – உலகக் கிண்ண தொடர் 2023

-

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

எனவே முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அந்த அணிசார்பில் அதிகபடியாக, ஜோ ரூட் 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், நியூசிலாந்து அணியின் மாட் ஹென்றி 48 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில், 283 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்தரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அந்த அணிசார்பில் அதிகபடியாக, டெவோன் கொன்வே 152 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திர 122 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இங்கிலாந்து அணியின் செம் கர்ரன் 47 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இதன்படி இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

Latest news

Augathellaவின் நீர் விநியோக இடமான Charleville-ல் மூளையை உண்ணும் ஆபத்தான அமீபா கண்டுபிடிப்பு

தென்மேற்கு குயின்ஸ்லாந்து ஷையரின் குடிநீர் விநியோக நிலையத்தில் மூளையை உண்ணும் ஒரு அரிய மற்றும் ஆபத்தான அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Charleville மற்றும் Augathella-இற்கான குடிநீரில் Naegleria fowleri என்ற...

உணவுப் பொட்டலத்தில் எடையுடன் கூடிய e எழுத்து என்ன?

உணவுப் பொட்டலத்தில் உள்ள "e" சின்னம் (250 கிராம் e) அதன் எடையுடன் சேர்த்து, கேள்விக்குரிய பொருள் சரியான எடையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது என்று...

தரவு பாதுகாப்பிற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று, அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராட AI ஐப் பயன்படுத்தி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் வங்கி...

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...