உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம் பெர்த்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
189 மீட்டர் உயரம் கொண்ட இதில் 50 தளங்கள் உள்ளன, இதில் 200 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
மேம்பாட்டுத் திட்டத்தின் கட்டுமானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கட்டடக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இக்கட்டடத்தின் 40 வீதத்தை வலுவான இலகுவான மரத்தினால் உருவாக்க திட்டமிடுபவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த கட்டிடத்தில் 100 வீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மரத்தாலான கட்டிடத்தை பசுமையான சூழலில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாக்கும் வகையில் கட்டுவது குறித்தும் கட்டிடக்கலை நிபுணர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 80 மின்சார வாகனங்களுக்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
25 மாடிகளைக் கொண்ட உலகின் மிக உயரமான மரக் கட்டிடம் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் அமைந்துள்ளது, அதன் உயரம் 86.6 மீட்டர்.