Newsவாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் எடுக்கப்படும் முடிவு குறித்து பிரதமரிடம் இருந்து ஒரு கேள்வி

வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் எடுக்கப்படும் முடிவு குறித்து பிரதமரிடம் இருந்து ஒரு கேள்வி

-

வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டால், பூர்வீகக் குரல் அரசியலமைப்பு திருத்தம் எந்த வகையிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதியளிக்கிறார்.

பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் வகையில் எந்தவொரு சட்டத்தையும் வலுக்கட்டாயமாக அங்கீகரிப்பது அல்ல தனது நோக்கம் என்று அவர் வலியுறுத்துகிறார்.

பழங்குடியின மக்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதில் ஆலோசனைக் குழுவொன்றை நியமித்தல் உள்ளிட்ட பல முன்மொழிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 1.8 மில்லியன் மக்கள் அதற்கான ஆரம்ப வாக்களிப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேற்று சிட்னியில் வாக்களித்தார்.

இந்த வாக்கெடுப்பு நிறைவேற வேண்டுமானால், பெரும்பான்மையான மாநிலங்களாலும், மக்களின் பெரும்பான்மை வாக்குகளாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இருப்பினும், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவைத் தவிர அனைத்து மாநிலங்களிலும், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...